புதிய ஊடகம் மற்றும் புதிய நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக காவல்துறை மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தமிழகம் முழுவதும்
இன்று புதிய நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் புதிய ஊடகம் குழுவின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள சில பகுதிகளில் காவல்துறை நண்பர்களுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும்உழைக்கும் தன்மை கொண்ட முகக் கவசங்கள் மற்றும் மதிய உணவாக பிரியாணி தமிழகம் முழுவதும் உள்ள புதிய ஊடகம் குழுவினர் சார்பாக வழங்கப்பட்டது. இந்த மகத்தான சேவையினை புதிய ஊடகம் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர்புதியசெல்வம் அவர்ளுடன் ஜோதிடர் முருகேஷன் மற்றும் ஆத்தியப்பன் அவர்களும் கலந்து கொண்டு நேரடியாக அவர்கள் பணி செய்யும் இடத்திற்கே சென்று வழங்கினார்கள். இவர்களுக்கு காவலர்கள் , முன்களப் பணியாளர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
Comments
Post a Comment