ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்


ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்றால் தன்னிடம் அல்லது ஆவின் புகார் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என்றும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார். மேலும் ஆவின் பாலகங்களில் நாட்டு மாட்டுப்பால் விற்பனை செய்வது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதேநேரம் நாட்டு மாட்டுப்பாலை தனியாக ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவந்து பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும் என்பதால் நாட்டு மாட்டுபால் விலை அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது ஆட்டுப்பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்திருக்கிறார்.

Comments

Popular posts from this blog

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வெள்ளானூரில் இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும் போலீஸ் புலனாய்வு மாத இதழ் சார்பாக குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள்.