திருவள்ளூர் அருகே கொரோனா தடுப்பு பணி குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை..!

திருவள்ளூர் அருகே கொரோனா தடுப்பு பணி குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை..!
திருவள்ளூர் மாவட்டம்
3/ஜூன்/2021 வியாழக்கிழமை

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர் உட்பட உபகரணங்கள் வழங்கப்பட்டது.!

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர் உட்பட பல்வேறு உபகரணங்கள்   வழங்கப்பட்டது 

இதனைத் தொடர்ந்து எல்லாபுரம் ஒன்றியத்தின் ஒரு பகுதி பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியின் கீழ் வருவதால் பெரியபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆன அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்

கும்மிடிப்பூண்டி மற்றும் பூந்தமல்லி ஆகிய சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் எளிதில் சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது

பின்னர் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் தலைமையில் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோரோனோ பரவல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எல்லாபுரம் ஒன்றியத்தின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்களிடம் வைத்தனர் இதனை ஏற்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளூர் நிர்வாகிகள் கேட்டுக்கொண்ட கோரிக்கைகள் முற்றிலும் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தனர் ...

Comments

Popular posts from this blog

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!