உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் 430 பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழா அமைச்சர் ஆவடி சா.மு .நாசர் பங்கேற்பு.!
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் 430 பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழா அமைச்சர் ஆவடி சா.மு .நாசர் பங்கேற்பு.!
திருவள்ளூர் மாவட்டம்
3/ஜூன்/2021 வியாழக்கிழமை
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு உங்கள் தொகுதியில் முதல்வர் எனும் திட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு இதனை பால்வல்துறை அமைச்சர் சா.மு. நாசர் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
ஆவடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 17000 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக 430 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் தொலைநோக்கு எண்ணத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இது வரும் 100 நாட்களில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ஆவடி தொகுதியில் 128 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் பிரதானமாக குடிநீர் தேவை,பாதளசாக்கடை, விதவை உதவிதொகை, முதியோர் பென்ஷன் ஆகியவை உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களை பொறுத்தவரை 1450 என்ற அளவில் கொரோனா பாதித்தவர்கள் இருந்தனர். தற்போது 500 என்ற வீதத்தில் உள்ளது இது இன்னும் ஓரிரு நாட்களில் முற்றிலும் குறையும்.
இந்தியாவிலுள்ள மற்ற முதல்வர்கள் பொறாமைபடும் வகையில் செயல்பாடுகள் தமிழகத்தில் உள்ளது.
கடந்த முறை ஒரு வருடம் ஆகியும் முதல் அலை சங்கிலியை முந்தைய அரசு முறியடிக்க வில்லை. ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள தி மு க அரசு முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலின் மூன்றே வாரங்களில் இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இது மேலும் தமிழ்நாட்டில் ஆக்சிஜன் 24000 படுக்கைகள் காலியாக உள்ளன. படுகைக்காக காத்திருக்கும் சூழல் இல்லை என உருவாகியுள்ளோம்.
நாளொரு வண்ணம் தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்
இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கே பொன்னையா ஆவடி வட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment