காவலர் தாக்கி பலியான விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு

WhatsAppFacebook

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் விவசாயியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் காவல்துறை சோதனையின் போது காவலர் தாக்கி பலியானார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

முருகேசன்

இதுதொடர்பாக கேள்விக்கு சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

Comments

Popular posts from this blog

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!