இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் தென்காசிமாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்தகுருசேவ ரத்தினா டாக்டர். பா.பாலீஸ்வரன் M.B.A. அவர்களுக்கு சிறந்த சமூகசேவைக்கான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது /நாளையகலாம் விருது வழங்கப்பட்டது இவ்விருதினை நீதியரசர் மதிப்புமிகு. வைத்திலிங்கம் அவர்கள் டாக்டர் ஏபி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பேரன்.மதிப்புமிகு.சேக்சலீம் அவர்களும் சர்வதேச தமிழ்கலைக்கழகத்தின் வேந்தர் மதிப்புமிகு.பாண்டியராஜன் அவர்களும் பல்கலைகழகத்தின் முதல்வர் மதுரை காமராஜர் பல்கலைகழகதகல் தொலைதொடர்பு அதிகாரி அவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர் ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்றால் தன்னிடம் அல்லது ஆவின் புகார் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என்றும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார். மேலும் ஆவின் பாலகங்களில் நாட்டு மாட்டுப்பால் விற்பனை செய்வது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதேநேரம் நாட்டு மாட்டுப்பாலை தனியாக ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவந்து பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும் என்பதால் நாட்டு மாட்டுபால் விலை அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது ஆட்டுப்பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்திருக்கிறார்.
தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!! August 26, 2021 புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ரூ.9,924 கோடிக்கான பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது :- தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவேன் என்பதை உறுதியளிக்கிறேன். புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் வழங்கப்படும். ஆடுகள் வாங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். கறவை மாடுகளை பரமாரிக்கவும், கூட்டுறவு வங்கிகளில் இல்லாதவர்களுககு 7...
Comments
Post a Comment