தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு ?? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில், முதலில் 50% அதனையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டது.

இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால்தியேட்டர் திறப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக தியேட்டர்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தியேட்டர் திறப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றும், வருகிற 27-ஆம் தேதி முதல் தியேட்டர் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Comments

Popular posts from this blog

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!!