கழிவுநீர் ஏற்றுச் செல்லும் லாரிகள், அதனை நீர் நிலைகளிலோ, சாலைகளிலோ கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பிஜான் வர்கீஸ்.

திருவள்ளூர்


கழிவுநீர் ஏற்றுச் செல்லும் லாரிகள், அதனை நீர் நிலைகளிலோ, சாலைகளிலோ கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பிஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டும், சுகாதாரத்தை காக்கும் பொருட்டும் கழிவுநீரை நீர்நிலைகள் மற்றும் சாலைகளில் திறந்து விடுவதை தடுத்து, அதனை முறையாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து, அந்த கழிவுநீரை முறையாக வெளியேற்றும் பொருட்டும், அனைத்து லாரி உரிமையாளர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், கழிவுநீர் கொண்டு செல்லும் லாரிகள் அக்கழிவு நீரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பேரூராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வெளியேற்ற வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் அக்கழிவுநீரை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளிலோ அல்லது சாலைகளிலோ வெளியேற்றக் கூடாது. அவ்வாறு விதிகளை மீறி வெளியேற்றினால் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விதியை மீறிய வாகனங்கள் கைப்பற்றப்பட்டு இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விதியை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவு 134(1)-ன்படி மற்றும் தமிழ்நாடு நகராட்சி சட்டம் பிரிவு 313-ன் படியும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கிறது.

மேற்கண்ட விதிமீறல்கள் ஏற்படின் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட உதவி மைய இலவச செல்போன் எண் 18005997626 மற்றும் 98403 27626 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக கடந்த 24ஆம் தேதி பூந்தமல்லி – மதுரவாயல் புறவழிச்சாலையில் கழிவுநீரை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, விதிகளை மீறி மழைநீர் வடிகால் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றியதால் கைப்பற்றப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தள்ளார்.


Comments

Popular posts from this blog

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!!