காங்கிரஸ் காரனுக்கு கூட தரவில்லை திமுகாவினருக்கு 7 சீட்டுகளை கொடுத்தேன். காங்கிரஸ் செயல் தலைவர்.!!

விஞ்ஞானத்தின் வளர்ச்சிகள் குரங்கு கையில் பூமாலை போல மோடி அமித் ஷாவிடம் சிக்கி உள்ளது என விஞ்ஞான வளர்ச்சி தவறாக பயன்படுத்தப்படுவதாக திருவள்ளூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76 வது வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் தெரிவித்தார்.
திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமரான பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் ஏ.ஜி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்தனர்.

அப்போது புதிதாக கட்சி பொறுப்பேற்ற நபர்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை கல்வியாளர்களாக திகழும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன், பால்வளத் துறை அமைச்சர் நாசர், முன்னாள் மாவட்டச் செயலாளர் வேணு உள்ளிட்டோர் என ஏழு இருக்கைகளையும் திமுகவினருக்கே வழங்கியதாகவும் கூட்டணி கட்சியினருக்கு நாம் மதிப்பு வழங்க வேண்டும் என்றும் வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலை இணைந்து வெற்றி பெற அனைத்து விதத்திலும் கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.

டாக்டர் ஜெயக்குமார்



பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாட்டின் விஞ்ஞான ரீதியான வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழி வகுத்தவர் என்றும் ஆனால் இந்த விஞ்ஞான வளர்ச்சி தற்போது குரங்கு கையில் பூமாலை சிக்கியது போல பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சிக்கி விட்டது.

Comments

Popular posts from this blog

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!!