நாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை இன்று (30-08-2021) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.,ஷா.நவாஸ்!!

நாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை இன்று (30-08-2021) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.,ஷா.நவாஸ்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம், சிக்கல் சிங்காரவேலர் கோவில் போன்ற புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளதால் ஆன்மீக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். நாகப்பட்டினம் மக்களும் திருப்பதி, திருத்தணி போன்ற திருத்தலங்களுக்கு அதிகமாக சென்று வருகின்றனர். எனவே, திருப்பதி திருத்தணி பகுதிகளிலிருந்து நாகப்பட்டினம் வருவதற்கும், நாகப்பட்டினம் மக்கள் அப்பகுதிகளுக்கு செல்வதற்கும் நேரடியாக பேருந்துகள் இயக்க வேண்டுமென, கடந்த 18-08-2021 அன்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் R.S.இராஜ கண்ணப்பன் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.

அதன்படி நாகப்பட்டினத்திலிருந்து நாகூர், திட்டச்சேரி, திருமருகல், மயிலாடுதுறை, நெய்வேலி, விழுப்புரம், திண்டிவனம், திருத்தணி வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய மாண்புமிகு அமைச்சர் அண்ணன் இராஜ கண்ணப்பன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

Comments

Popular posts from this blog

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!!