எல்லாபுரம் ஒன்றியத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு அடையாள சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!
எல்லாபுரம் ஒன்றியத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு அடையாள சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சாகுபடி இல்லாத நிலங்களை சாகுபடி நிலமாக மாற்றும் செயல் திட்டத்தின்படி எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உள்ளிட்ட அம்மணம்பாக்கம் குறுவட்டத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறு குறு விவசாயிகளுக்கு அடையாள சான்று வழங்கப்பட்டது. இந்த முகாமிஸ் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் குமார், வருவாய் ஆய்வாளர் நரசிம்மண், கோடுவெளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயண் பெற்றனர்.
Comments
Post a Comment