அப்துல் கலாம் ஐயாவின் ஆறாவது நினைவு தினம் இன்று..

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று கூறிய இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆறாவது நினைவு தினம் இன்று.

தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு படகோட்டியின் மகனாக 1931-ஆம் ஆண்டு பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம்.

கனவு காணுங்கள் எனக்கூறி மறைந்த பின்பும் இளைஞர்களின் உந்துசக்தியாக திகழ்பவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.

கலாமின் இறுதி நாளும் அவர் விரும்பிய மாணவர்கள் முன்பு முடிவுபெற்றது. 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து காலமானார்.

Comments

Popular posts from this blog

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!!