கோவில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உட்பட 5 பெண்கள் உயிரிழப்பு 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை!
கோவில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உட்பட 5 பெண்கள் உயிரிழப்பு 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை!
புது கும்மிடிப்பூண்டியில் உள்ள சீதம்மாள் தெருவைச் சேர்ந்த நான்கு குடும்பங்களைச் செர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள்,அஸ்விதா, ஜீவிதா,நர்மதா,ஜோதிலட்சுமி உள்ளிட்ட 5 பேர் துணி துவைக்க சென்றுள்ளனர்.
இதில் மூன்று சிறுமிகள் கோவில் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
நீரில் மூழ்கி தத்தளிக்கவே காப்பாற்ற சென்ற இரண்டு பெண்கள் உட்பட 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியாயினர் இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்து சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பின் 5 பேரின் சடலங்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் கோவில் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment